இரணியல் அருகே உள்ள மாடத்தட்டு விளை சேர்ந்தவர் சத்திய ஆல்வின் (48). தொழிலாளியான இவருக்கு சுஜா என்ற மனைவி, இரண்டு மகள்களும் உள்ளனர். கடன் பிரச்சனை இருந்ததால் மாடத்தட்டு விளையில் உள்ள வீட்டை விற்று விட்டு, மனைவி மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சத்திய ஆல்வின் பைக் குதிரை பந்திவிளை இரட்டை கால்வாய் ஆற்றுப்பாலம் பகுதியில் இருப்பதை அவரது தம்பியின் மகன் கண்டுள்ளார். சந்தேகம் அடைந்தவர் கால்வாயில் பார்த்தபோது சத்யாவின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து அவர் உறவினர்கள் மற்றும் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்த வந்த போலீசார் உடலை பார்வையிட்டு, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். சத்யா கடந்த 26 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர் தொழிலுக்கு சென்று இருக்கலாம் என உறவினர்கள் நினைத்தனர். இந்த நிலையில் தான் அவர் நேற்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். அவரது இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.