நீலகண்ட சுவாமி கோவில் விழா துவக்கம்

கல்குளம்;

Update: 2025-04-01 12:50 GMT
கல்குளம் ஸ்ரீ நயினார் திரு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் பங்குனி தேர்திருவிழா திருக் கொடியேற்றம் இன்று காலை 10.30 மணி அளவில் நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழாவின் 9 வது நாளான வரும் 9ம் தேதி தேர்திருவிழா வெகு விமர்சையாக நடை பெறுகிறது. இவர்களுடன்கோவில் ஸ்ரீ காரியம் மோகனகுமார், பத்மநாபபுரம் திமுக நகர பொருளாளர் ஸ்ரீராம், கங்காபிரசாத் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.

Similar News