செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்படக் கண்காட்சி.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், ஊர்குடி ஊராட்சியில் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும்வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.;

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், ஊர்குடி ஊராட்சியில் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும்வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், வானவில் மன்றம், பசுமை தமிழகம், நம்ம பள்ளி பவுண்டேசன், நம்ம பள்ளி, நம்ம பெருமை, எண்ணும் எழுத்தும், கல்லூரி கனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள்;, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு தொழில் சார் கடனுதவி வழங்குதல், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மேலும், மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.