எஸ்.கோவில்பட்டியில் மீன்பிடி திணுவிழா
சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்ற நிலையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.கோவில்பட்டி கிராமத்தில் உள்ள அம்மி கண்மாயில் கிராம மக்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி ஒற்றுமையாக மீன்பிடித்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும் கிராமமக்கள் அனைவரும் வேகமாக ஓடிச் சென்று கம்மாயில் இறங்கி வலைக்குள் சிக்கிய வித விதமான மீன்களை பிடித்தனர். தொடர்ந்து சூரக்குடி, கோவில்பட்டி, புதுப்பட்டி, முத்துச்சாமிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மீன்பிடி வலை, கச்சா, அரிவலை, கொசுவலை உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் விரா மீன், கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர்.