இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி;

Update: 2025-04-02 15:18 GMT
நீலகிரி மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் அமல்படுத்தியுள்ள இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு கடையடைப்பு செய்தும், ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் எதுவும் இல்லாததால் நகரப் பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது..... சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல இ பாஸ் முறையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதில் வார நாட்களில் 6000 வாகனங்களும் வார இறுதியில் 8000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 14 சோதனை சாவடிகளிலும் உயர் நீதிமன்றம் அறிவித்த எண்ணிக்கையின் அடிப்படையில் இபாஸ் சோதனை மேற்கொண்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹோட்டகள், தனியார் தங்கும் விடுதிகள், சிறுகுறு வணிக நிறுவனங்கள் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என இபாஸ் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். சோதனை என்ற பெயரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறது என அபராதங்கள் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட 12 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு செய்தும், பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உணவகங்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரப் பகுதியில் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Similar News