அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

வணிகர் சங்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்;

Update: 2025-04-02 15:23 GMT
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் இ பாஸ் முறை அமலுக்கு வந்துள்ள காரணத்தினால் வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் வார இறுதி நாட்கள் ஆன சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் 8000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக நீலகிரி மாவட்ட நுழைவாயில்களில் உள்ள சோதனைச் சாவடிகள் கண்காணிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இ பாஸ் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இ பாஸ் முறையை கைவிட வேண்டும் என்றும் குன்னூர் மார்க்கெட் இடித்து கட்டும் பணியையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் இதில் சுற்றுலா வாகன ஓட்டிகளும் பெரும்பாலும் ஆதரவு தெரிவித்துள்ளனர் ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே நீங்க வருகிறது மற்றும் அரசு பேருந்துகள் தனியார் வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

Similar News