காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு!
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி பள்ளிகளின் ஐ.ஜி ஜெயகவுரி திடீரென ஆய்வு செய்தார்.;

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி பள்ளிகளின் ஐ.ஜி ஜெயகவுரி திடீரென ஆய்வு செய்தார். அப்போது, 2-ம் நிலை பெண் காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து சட்ட விதிகள் குறித்தும், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்து கூறினார். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது காவலர் பயிற்சி பள்ளி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.