
நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மதுரை மாவட்டம், விளாச்சேரி பகுதியை சேர்ந்த உதய பிரகாஷ் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு அருகே முடி திருத்தும் கடையும் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைக்கை வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது அவரது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உதய பிரகாஷ் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். புகார் என் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.