ராமநாதபுரம் பணங்கள் விற்பனை செய்த ஒருவர் கைது
தொண்டி அருகே 105 லிட்டர் பனங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஒருவர் கைது தொண்டி காவல் துறையினர் நடவடிக்கை;
ராமநாதபுரம் மாவட்டம்திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை நாரேந்தல் கிராமத்தில் தொண்டி சார்பு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் போலீசார் கணேசன், ராமச்சந்திரன் ஆகியோர் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து சென்றபோது விருதுநகர் மாவட்டம் நல்ல மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சேட்டு (56) என்பவர் 105 லிட்டர் பனங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்