ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் சிப்பந்திகள் உத்சவம் விமரிசை

ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;

Update: 2025-04-03 08:22 GMT
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில் சிப்பந்திகள் உத்சவம் விமரிசை
  • whatsapp icon
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இங்கு, ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி அமாவாசையொட்டி, தர்மகர்த்தாக்கள் மற்றும் கோவில் ஊழியர் ஒன்றினைந்து, சிப்பந்திகள் உத்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று, காலை 10:00 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் கேடயத்தி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில், பெரிய வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆதிகேசவப் பெருமாளை வழிபட்டனர்.

Similar News