
பெரியகுளம் அழகர்சாமிபுரத்தில் செட்டிகுளம் அமைந்துள்ளது. கீழவடகரை ஊராட்சியின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த குளத்தில் கீழ வடகரை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை முறையாக மறுசுழற்சி செய்யாமல் டிராக்டரில் ஏற்றி சென்று கொட்டி தீ வைத்து மாசுபடுத்துகின்றனர். இங்கு குப்பைகளுக்கு தினமும் தீ வைப்பதால் அந்தப்பகுதி முழுவதும் மாசுபட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.