கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வைரவன். அவரது மகன் முகேஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் சுந்தரபாண்டியன் மற்றும் அவருடன் நின்றிருந்த கவாஸ்கர் மற்றும் கவாஸ்கர் தாயாரை வைரவன், முகேஷ் உள்ளிட்ட 4 பேர் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் வைரவனை கைது (ஏப்.2) செய்த போலீசார் மற்ற மூவரை தேடி வருகின்றனர்.