சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருத்தணி - சித்தூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-03 14:25 GMT
வேலூர் மாவட்டம் பரமசாத்து ஊராட்சி சீனிவாசபுரம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், காரிய மேடை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்குகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருத்தணி - சித்தூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.

Similar News