கைலாயநாதர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை!
உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் குருவராஜா பாளையம் பாக்கம் கிராமம் உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு இன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருக்கோயிலில் மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.