வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.;

Update: 2025-04-03 14:34 GMT
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (வயது 22). இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஷாலினியின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரிந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

Similar News