மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா!
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் விரிஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பிரியா, கோவில் கணக்காளர் ஆனந்தன் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.