கோடையில் தண்ணீா் அமைப்பினா் விழிப்புணா்வு பிரசாரம்

கோடையில் பறவைகளுக்கு தண்ணீா் அளிக்க மண் பாத்திரம்: வீடுகள் தோறும் வழங்கி தண்ணீா் அமைப்பினா் விழிப்புணா்வு பிரசாரம்;

Update: 2025-04-03 20:44 GMT
தண்ணீா் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சாா்பாக மண் பாத்திரத்தில் தண்ணீா் ஊற்றி, வீட்டு மொட்டை மாடி, ஜன்னல் பகுதி, வாசல் பகுதி, தோட்டம், நீா்நிலைகள் மற்றும் மரங்கள் அருகில் உள்ள வீடுகளில் வழங்கப்பட்டது. கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளுக்கு மண்பானையில் தண்ணீா் வைத்தால், அது நீண்ட நேரம் குளிா்ச்சியாக இருக்கும். பறவைகள் மூழ்கி குளித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவும். நம்மால் முடிந்த அளவு பறவையினங்கள் கோடையின் கொடுமையால் அழியாமல் காத்திட சிறிய முயற்சிகள்தான் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பது. சூழலின் உயிா்ப்புக்கு பறவைகள் மிகவும் அவசியம். பொன்மலையடிவாரம் பகுதியில் வியாழக்கிழமை குடியிருப்புகள், மரங்கள் அடா்ந்த பகுதியில் பறவைகளுக்கு தண்ணீா் வைக்கும் பணி நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீா் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமையில், தண்ணீா் அமைப்பு செயலாளா் கி. சதீஸ்குமாா், துணை செயலாளா் ஆா்.கே. ராஜா, மெக்கானிக் மணி, என்.வெங்கடேஷ், தேவிகிருஷ்ணமூா்த்தி, மலைக்கோட்டை தாமு, சுமன், சுதன், மற்றும் பலா் கலந்து கொண்டு வீடுகள் தோறும் மண் பாத்திரங்களை வழங்கினா்.

Similar News