காவலரை தாக்க முயன்றவா் கைது
வி.துறையூா் பகுதியில் புதன்கிழமை இரவு போலீஸாா் ஒருவரை தாக்க முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா்.;
திருச்சி மாவட்டம், வி.துறையூா் பகுதியையை சோ்ந்தவா் பாா்த்திபன் (எ) மாங்கா பாா்த்திபன். இவரது மனைவி சுவேதா. புதன்கிழமை இரவு பாா்த்திபன், சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து, சுவேதா அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற சமயபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, போலீஸாா் ஒருவரை பாா்த்திபன் தகாத வாா்த்தையால் திட்டியும், தாக்கவும் முயன்றாராம். இதையடுத்து, போலீஸாா் பாா்த்திபனை கைது செய்து விசாரிக்கின்றனா்.