அகஸ்தீஸ்வரம்: நில அளவை பணிகள்

கலெக்டர் ஆய்வு;

Update: 2025-04-04 07:48 GMT
அகஸ்தீஸ்வரம்: நில அளவை பணிகள்
  • whatsapp icon
கன்னியாகுமரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் வட்டம் லீபுரம் பகுதியில் மறுநிலஅளவை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, பார்வையிட்டு கூறியதாவது:-           அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட 36 வருவாய் கிராமங்களை மறுநில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 14 கிராமங்கள் மறுநிலஅளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில் இன்று லீபுரம் கிராமத்தில் மறுநிலஅளவை பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மறுநில அளவை திட்டப்பணியில் நவீன டிபெரன்ஷியஸ் குளோபல் பொசிஷனிங்   சிஸ்டம் ((Differential Global Positioning System) கருவிகளைக் கொண்டு நில அளவைப் பணி நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்ப கருவியான நிலப்பரப்பு, உயரம், எல்லைகள் போன்றவற்றை துல்லியமாக அளவிடும் வரைப்படம் பொதுமக்களுக்கு கிடைத்திட  உதவிகரமாக இருக்கிறது.    இக்கருவியின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நிலம் சம்மந்தப்பட்ட இடங்களை துல்லியமாகவும், கூட்டுபட்டாதார்களை தனி பட்டாவாக மாற்றம் செய்திடவும் வழிவகை செய்வதோடு, இப்பணிகள் குறித்து மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மறுநில அளவை பணியாளர்களுக்கும்  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.  நடைபெற்ற ஆய்வில் மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் ப.இளையராஜா, மறுநில அளவை ஆய்வாளர், கோட்ட ஆய்வாளர் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News