ராமநாதபுரம் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வக்ப் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டதைராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்;
ராமநாதபுரம். மாவட்டம் வக்ப் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இச்சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டதன் பெயரில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இச்சட்டம் கூட்டாட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது என்றும் சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வக்ப் சட்டம்கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வக்ப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணி செயலாளர் தமீம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஞ்சன், ராமநாதபுரம் நகர் செயலாளர் ராஜ்குமார்,ராமேஸ்வரம் நகச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.