கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்.26,27,28 ல் தேசிய அளவிலான காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தேனி முல்லை நகரை சேர்ந்த தடகள வீராங்கனை பிரியங்கா கலந்து கொண்டு பெண்கள் பிரிவில் 4x400 மீ. தொடர் ஓட்டம், 4x100 மீ. தொடர் ஓட்டம், கலப்பு பிரிவில் 4x100 மீ.தொடர் ஓட்டத்தில் மொத்தம் 5 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.