ஆண்டிப்பட்டி அருகே குட்டையில் விழுந்து மூன்று வயது சிறுவன் உயிர்யிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-04 12:37 GMT
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் யுவரஞ்சனி (25). இவரது மூன்று வயது மகன் வேணுபிரசாத் தனது தாத்தாவுடன் நேற்று (ஏப்.3) தோட்டத்திற்கு சென்றுள்ளார். சிறுவனின் தாத்தா இலை பறிக்க சென்ற பொழுது அப்பகுதியில் இருந்த குட்டையில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

Similar News