மூடிய நிலையில் மருந்து வழங்கும் கவுண்டர்

அரசு மருத்துவ கல்லூரி;

Update: 2025-04-04 12:42 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் பலவிதமான நோய்களுக்கான சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர் . இந்த மருத்துவமனைக்குள் மருந்துகள் வழங்க தனியாக மருந்து வழங்கும் இடங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நோயாளிகள் மட்டும் மாதத்தில் சில நாட்கள் மருந்துகள் வாங்க வேண்டியுள்ளது.. அதேசமயம் புறநோயாளிகளும் மருந்து வாங்க வரும்போது அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். அப்போது மருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் காலை முதல் மாலை வரை கால் கடுக்க காத்து நிற்க வேண்டியுள்ளது. ஏற்கனவே நோயுடன் வருபவர்கள் மேலும் பல மணி நேரம் காத்திருப்பது கூடுதல் நோயாளியாகும் சூழல் உள்ளது. மேலும் 8-கவுண்டர்கள் உள்ளன.  இதில் 3- கவுண்டர்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 5 - கவுண்டர்களில் மக்கள் அதிகமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.  .இதில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் முதியோர்கள் என பலரும் பாதிப்படைகின்றனர். ஆகவே நோயாளிகளின் சுமையை குறைக்கவும் பணியாளர்களின் பணி சுமையை போக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக கூடுதல் மருந்து வழங்கும் ஊழியர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வேண்டுகோள்.

Similar News