சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கண்மணி மனைவி ஜூலினா (43). இவரது சகோதரர்கள் 2 பேர் குமரி மாவட்டம் சைமன் காலனி, மண்டைக்காடு பகுதிகளில் வசித்து வருகின்றனர். சகோதரர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜுலினா கடந்த சில நாட்களும் முன்பு சகோதரர்கள் வீட்டிற்கு தனது மகன் மற்றும் மகளுடன் வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பின்னர் மண்டைக்காடு காரவிளையில் வசிக்கும் மற்றொரு சகோதரர் வீடு சென்றுள்ளனர். நேற்று ஜூலினாவின் 21 வயது மகள் வீட்டின் மேல் பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை பார்த்த வந்த திங்கள்நகர் பகுதியை சேர்ந்த சகாய ஜெங்கின்ஸ் (41) என்ற கொத்தனார் ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ஓடி சென்று தனது தாயாரிடம் கூறினார். அவர் அங்கு சென்று பார்த்தபோது ஆபாச செயல் ஈடுபட்ட கொத்தனார் சகாய ஜெங்கின்ஸ் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து மறைவான கொத்தனாரை தேடி வருகின்றனர். தலைமறைவான கொத்தனாருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.