தவக ஆர்ப்பாட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட முடிவில் வாக்குவாதம் கைகலப்பு: நிர்வாகிகள் சாலையிலேயே மோதிக்கொண்டதால் பரபரப்பு;
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட முடிவில் வாக்குவாதம் கைகலப்பு: நிர்வாகிகள் சாலையிலேயே மோதிக்கொண்டதால் பரபரப்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய வக்ஃபு வாரிய சட்டத்தினை ஆளும் பாஜக அரசு கடுமையான எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் திமுக பல்வேறு கட்டமாக தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் புதிய வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் குட்டி என்கிற பிரகாசம் தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பிரகாசம் என்கிற குட்டியுடன் நிர்வாகிகள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது யார் ஃபோட்டோ எடுப்பது என்பதில் வாக்கவாதம் ஏற்பட்டு கைகளப்பாக மாறியது. இதில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் மற்றும் பூந்தமல்லி கட்சி நிர்வாகிகளிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அருகில் இருந்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற களம் போர்க்களமாக மாறியது. ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் சாலையில் அநாகரிகமாக கட்சியின் நிர்வாகிகள் சாலையின் நடுவே அடித்துக்கொண்ட சம்பவம் அவ்வழியாக சென்றவர்கள் இடையே முகசுளிப்பை ஏற்படுத்தியது