பஞ்ச பாண்டவர்களுக்கு சிறப்பு பூஜை!
பழமையான திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.;
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள பழமையான திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான பஞ்சபாண்டவர்களின் பிறப்பு கதாபாத்திரம் நடைபெற்றது. இதனை கொண்டாடும் வகையில் பஞ்ச பாண்டவர்கள் சிறப்பு பூஜையும் மற்றும் மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.