கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (05.04.2025) சனிக்கிழமை கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்