வேகமாக பரவி வரும் வைரல் காய்ச்சல்: சிகிச்சைப் பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
வேகமாக பரவி வரும் வைரல் காய்ச்சல்: சிகிச்சைப் பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் கிராமத்தில் வேகமாக பரவி வரும் வைரல் காய்ச்சலில் ஒருவர் சிகிச்சை பெற நன்றி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் கிராமத்தில் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு சுகாதார துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமம். இங்கு கடந்த சில நாட்களாக திடீரென வெய்யிலின் தாக்கம் மற்றும் அதிகாலை பனிப்பொழிவு என காலநிலை மாறியதால் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது . இந்த கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் நிலையில், பலர் அருகே எளாவூர் அடுத்த துராப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். மேலும் பலர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுகாதார ஆய்வாளரிடமும் கிராம மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் முறையான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஏடூர் கிராமத்தில் வசித்து வந்த சுரேஷ் (46) என்பவர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உளள அரசு மருத்துவமனைக்கு கிசிச்சைக்காக சென்றார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அன்றையை தினமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த கிராம மக்கள் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே ஏடூர் ஊராட்சியில் அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.