கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்த கலெக்டர்

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-04-04 17:25 GMT
  • whatsapp icon
திருவள்ளூர் : முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபடி கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர்மு. பிரதாப் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர்மு.பிரதாப் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி கையுந்துப் போட்டி, கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர் தெரிவிக்கையில், முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் மூலம் அவர்களது செயல்படுத்திய திட்டங்கள் சாதனைகள் மற்றும் அவர் எழுதிய இதழ்கள் குறித்து கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது அதன் அடிப்படையில் இன்றைய தினம் திருவள்ளுர் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் பொதுமக்கள் இருபாலருக்கும் வயது வரம்பு 26 முதல் 35 வரை ஆண்,பெண் மூன்று போட்டிகள் முறையே கபாடி, கால்பந்து, மற்றும் கையுந்துப்பந்துப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று 03.04.2025,துவங்கி 04.04.2025 மற்றும் 05.04.2025 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைப்பெறவுள்ளது இந்த மூன்று போட்டிகளின் பரிசு தொகை (ஆண்கள் மற்றும் பெண்கள்)1. கபாடி முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.20,000, இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ९.5,000 2. கையுந்துப்பந்து முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.15,000, இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ. 10,000 மற்றும் மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.5,000 -ம்3. கால்பந்து போட்டிகளில்முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.25,000, இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.20,000 மற்றும் மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. மேலும், வருகிற 6 ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 கீ.மீ மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது இப்போட்டியில் பங்கு பெரும் வீரர்களுக்காக இணையதளத் வசதி க்யூ ஆர் கோடு போன்ற பல்வேறு வகையில் பிரச்சுரங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி பொது மக்களிடையே விளையாட்டினால் உடல்நலம் மேம்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்னதாக ரூ.12.50 இலட்சம் புதுப்பிக்கப்பட்ட உள்அரங்கு இறகு பந்து மைதானத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் பயிற்றுநர்கள் லாவண்யா (தடகளம்), காயத்ரி (கால்பந்து), லோகேஷ் குமார் உடற்கல்வி ஆசிரியர் ரூபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Similar News