முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் மூன்று பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவு
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் மூன்று பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவு;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான வெங்கடேசன் அவரது மனைவி சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் இதனை மனைவியிடம் விசாரித்த கணவன் வெங்கடேசனை மனைவி சந்தியா கூலிப்படையை ஏவி ராணுவ வீரரை கார் ஏற்றி கொலை செய்து மீண்டும் மரணம் அடையாததால் இரும்புராடால் மற்றும் கத்தியால் குத்தி அடித்து கொலை செய்துள்ளனர் இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கை வேகப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர் பின்னர் தனது கணவருக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி சந்தியாவை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது இந்த கொலை வழக்கில் 1)சந்தியா,2) யோகேஸ்வரன், 3) சதீஷ் 4) ஸ்ரீ ராம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர், இந்நிலையில் ராணுவ வீரர் கொலை வழக்கில் சிறையில் உள்ள 1) ஸ்ரீராம், 2) சதீஷ், 3) யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் இந்த உத்தரவை திருவாலங்காடு போலீசார் புழல் சிறைத்துறை அதிகாரிகளிடத்தில் வழங்கினார்கள்..