பறவைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி

கன்னியாகுமரி அரசு கல்லூரி;

Update: 2025-04-05 06:42 GMT
கன்னியாகுமாரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு, பறவைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  பறவை விஞ்ஞானி டாக்டர் பாலசந்திரன், சூழியல் ஆராய்ச்சியாளர் சுதாமதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, வலசை பறவைகள், அவற்றின் வாழ்விடங்கள், உப்பளங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்திய இந்த நிகழ்ச்சியில், மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Similar News