பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆன்மீக புத்தக நிலையம் பக்தர்களுக்காக திறப்பு

பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆன்மீக புத்தக நிலையம் பக்தர்களுக்காக திறந்து வைத்தனர்;

Update: 2025-04-05 14:02 GMT
ஆண்டார்குப்பத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆன்மீக புத்தக நிலையம் பக்தர்களுக்காக திறந்து வைத்தனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் இன்று புதிதாக திறக்கப்பட்டது இதனை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து புத்தக விற்பனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தொடங்கி வைத்தார் இதில் சோழவரம் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வசேகரன் பரம்பரை அறங்காவலர் Ad ராஜசேகர் கோவில் செயல் அலுவலர் பாலாஜி மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் Tலட்சுமநாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருவாசகம் பெரியபுராணம் கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகப் புத்தகங்களை பக்தர்கள் வாங்கி படிக்கும் வகையில் கோவில் வளாகத்திலேயே புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது

Similar News