பெரம்பலூர்: கோயில் திருவிழா தொடக்கம்
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி சமேத பூதேவி மதனகோபால சுவாமி சிறப்பு அபிஷேகம் முடித்து, அலங்காரம் செய்து கொடி மரத்தின் முன் எழுந்தருளினார்.;

பெரம்பலூர்: கோயில் திருவிழா தொடக்கம் பெரம்பலூர் நகரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி சமேத பூதேவி மதனகோபால சுவாமி சிறப்பு அபிஷேகம் முடித்து, அலங்காரம் செய்து கொடி மரத்தின் முன் எழுந்தருளினார். தேரோட்டம் ஏப். 12ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.