நுலகக் கட்டிடத்தில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்க்காக நில விவர ஆவணங்களை பதிவு செய்யும் முகாம்
பின்-கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ .6000 பெறவும் தனித்துவ அடையாள அட்டை அவசியம் என்பதால் நில விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளை கண்டறிந்து ஏப்ரல் 15-ம் தேதிக்குள் பதிவு செய்திட வேளாண்மைத்துறை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுரை வழக்கினார்.;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவு படி பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி நுலகக் கட்டிடத்தில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்க்காக நில விவர ஆவணங்களை பதிவு செய்யும் முகாம் பெரம்பலூர் உதவி வேளாண்மை அலுவலர் கதிரவன் மற்றும் செங்குணம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்று வருகிறது .விவசாயிகள் கணினி சிட்டா ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்பேசி எண்ணுடன் வந்து நில விவரங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர் .இம்முகாமினை இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மைத்துறை ) ராணி ஆய்வு மேற்கொண்டார் . எதிர் வரும் காலங்களில் வெள்ள நிவாரணம்,வறட்சி நிவாரணம் பெறவும் பின்-கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ .6000 பெறவும் தனித்துவ அடையாள அட்டை அவசியம் என்பதால் நில விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகளை கண்டறிந்து ஏப்ரல் 15-ம் தேதிக்குள் பதிவு செய்திட வேளாண்மைத்துறை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுரை வழக்கினார்.