திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (ஏப்ரல் 5) மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்திப்பு அப்பல்லோ ஸ்டூடியோ அருகில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பரிசுத்த ஆவி தெருவை சேர்ந்த குமார் (52) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 123 மது பாட்டில்களை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.