கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற மரம் நடுதல் உள்ளிட்ட தூய்மை பணி
தூய்மை பணி;
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆயிரம் கால் மண்டபம் படித்துறையில் இன்று (ஏப்ரல் 6) நல்லோர் வட்டம் சார்பாக பொருநை ஆற்றங்கரை சோலை நடைபயணம்,மரம் நடுதல், ஆறு தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தூய்மை மற்றும் மரம் நடும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டனர்.