வனப்பகுதியில் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு

ஏரியூர் அருகே ஏமனூர் வனப்பகுதியில் யானையை கொன்ற வழக்கில் செந்தில் வனப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு,உறவினர்கள் குற்றச்சாட்டி உடலை வாங்க மறுப்பு.;

Update: 2025-04-06 08:41 GMT
  • whatsapp icon
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ஏமனூர் வனப்பகுதியில் ஆண் யானை கடந்த மார்ச் 1 ம் தேதி இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் ஆண் யானையை கொன்று தந்தம் கடத்தியது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார், கோவிந்தராஜ் மற்றும் கர்நாடக மாநிலம் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த பலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் விசாரணைக்கு சென்ற நபரில் செந்தில் என்பவர் வீடு திரும்பவில்லை எனக் கூறி அவரது மனைவி சித்ரா தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி மனு அளித்தார். கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று வனப்பகுதிக்குள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் அருகே இருந்த வனத்துறையினரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தப்பித்து ஓடி தலைமறைவாக இருப்பதாகவும், அவரை வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும் மாவட்ட வனத்துறை அலுவலர் தெரிவித்தார். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் செந்தில் நேற்று உடல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் நாட்டு துப்பாக்கியுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. மேஸ்திரி வேலை செய்து வரும் செந்திலுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கும் இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தற்போது முதற்கட்டமாக சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முகம் மற்றும் கை கால்கள் சிதைந்துள்ளது என்றும், கடந்த 18 ந் தேதியே தனது கணவரை வனத்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டனர் என்றும், தனது கணவரின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த செந்திலின் மனைவி தெரிவித்தார். மேலும் பிரேத பரிசோதனையின் போது நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

Similar News