தமிழ் புத்தாண்டு ஜல்லிக்கட்டு விழா அழைப்பு
டத்தோ பிரகதீஸ்வரரிடம் ஜல்லிக்கட்டு போட்டியின் விழா குழுவினர் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினர்.;

தமிழ் புத்தாண்டு ஜல்லிக்கட்டு விழா அழைப்பு பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, டத்தோ பிரகதீஸ்வரரிடம் ஜல்லிக்கட்டு போட்டியின் விழா குழுவினர் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் போது விழா குழுவினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.