கோவை: அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றம் !

கோவை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருக்கும், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.;

Update: 2025-04-06 12:26 GMT
கோவை மாநகராட்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதியின்றி ரயில்வே இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று தெரிவித்ததாவது, ரயில்வே இடங்களில் நகர சாலைகளை நோக்கி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களுக்கு மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கோவை புரூக்ஃபீல்டு சாலையில் ரயில்வே இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதேபோல், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே இடங்களில் வைக்கப்பட்டிருந்த 60 பேனர்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு ஊழியர்கள் அகற்றினர். மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமலும், அனுமதியின்றி வைக்கப்பட்டும் இருக்கும் பேனர்களை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News