கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.