சிதம்பரம்: கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம்
சிதம்பரம் கோதண்டராமர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மார்ச் 28 ஆம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. அதன்படி, மார்ச் 29 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ கோதண்டராமர் வீதியுலா நடை பெற்றது. இதைத் தொடர்ந்து, கோயில் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேரானது நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.