கோவை: மலையோரங்களில் கால்நடைகள் மேய்ச்சலை தடுக்க வேண்டும் !

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-04-07 15:42 GMT
கோவை: மலையோரங்களில் கால்நடைகள் மேய்ச்சலை தடுக்க வேண்டும் !
  • whatsapp icon
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த மழையை சாதகமாக பயன்படுத்தி கம்பு, காய்கறிகள், மலர்கள் பயிரிடலாம். மரவள்ளி நடவு செய்யவும் இது உகந்த நேரம். மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். அறுவடை முடிந்த வயல்களில் மழை நீரை சேமிக்க உழவு செய்ய வேண்டியது அவசியம். சரிவுக்கு குறுக்காக உழவு செய்வதன் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவை மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவுரைகளை பின்பற்றி விவசாய பணிகளை மேற்கொள்ளுமாறு அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News