கோவை: அங்கன்வாடி பணியாளர் பணியிடம் - விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.;

Update: 2025-04-07 16:01 GMT
கோவை: அங்கன்வாடி பணியாளர்  பணியிடம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
  • whatsapp icon
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 13 அங்கன்வாடி பணியாளர்கள், 23 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 101 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, எந்த வட்டாரத்தில் உள்ள காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த வட்டாரத்தின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அலுவலகத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News