சுல்தான்பேட்டை: சூறாவளி மழையால் வாழை மரங்கள் சேதம் !

சூறாவளி காற்றினால் வதம்பச்சேரி மற்றும் பூராண்டாம் பாளையம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.;

Update: 2025-04-08 01:14 GMT
  • whatsapp icon
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கடந்த ஒரு மாதமாக நிலவிய கடும் கோடை வெயிலால் பயிர்கள் கருகிய நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த சூறாவளி மழையால் விவசாயிகள் மேலும் கவலையடைந்துள்ளனர். இந்த சூறாவளி காற்றினால் வதம்பச்சேரி மற்றும் பூராண்டாம் பாளையம் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ரமேஷ் உத்தரவின் பேரில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தியாகராஜன், சாய் கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய கணக்கெடுப்பில், இன்னும் சில மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 3,300 நேந்திரன் வாழை மரங்கள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, அதிகாரிகள் கணக்கெடுப்பு தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Similar News