ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா
ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு பணம் மோசடி தொடர்பாக நடவடிக்கை வேண்டி தர்ணா ஈடுபட்ட மாற்றுத்திறனாளி.;
தர்மபுரி மாவட்டம் சிட்லகாரம் பட்டி பகுதியை சேர்ந்த முருகன் இவர் மாற்றுத்திறனாளி தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நேற்று பணம் மோசடி தொடர்பாக நடவடிக்கை வேண்டி தர்ணா ஈடுபட்டார். பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு மாவட்ட ஆட்சியிடம் மனு வழங்கினார் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில் எனது தம்பி காளி மற்றும் அவர்கள் மகன்கள் மோகன் குமார் பிரேம்குமார் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு பணத்தைக் கேட்ட இல்லை என்று மிரட்டுகின்றனர் எனவே பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னை வரவைத்து மிரட்டி அனுப்பி விட்டனர் மாற்றுதிறனாளியை ஏமாற்றுதல், மாற்றுதிறனாளியை துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து என்னிடம் அபகரித்த பணத்தை மீட்டு என்னிடம் கொடுக்குமாறும் மற்றும் என்னை ஏமாற்றி வரும் எனது தம்பி காளி மற்றும் காளியின் மகன்கள் மோகன்குமார், பிரேம்குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியாரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.