கோவை: தீக்குளிக்க முயன்ற பெண்ணால் கோவையில் பரபரப்பு !

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு பெரும் இடத்தில் பெண் ஒருவர் குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-04-08 03:41 GMT
  • whatsapp icon
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனுக்கள் பெறும் இடத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பொள்ளாச்சி கரட்டுப்பாளையம் சமத்துவ நகரைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு வெளியே அழைத்துச் சென்றனர். விசாரணையில், அரசு பேருந்து நடத்துனரான தனது கணவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருப்பதாகவும், அதனால் அவர் தன்னை விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்வதாகவும் நந்தினி கண்ணீருடன் தெரிவித்தார். கடந்த மாதம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து இத்தகைய முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். போலீசார் நந்தினியின் உடலில் இருந்து மண்ணெண்ணெயை அகற்றி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News