சிதம்பரம்: குழாய் பதிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு
சிதம்பரம் பகுதியில் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட கமலீஸ்வரன்கோயில் தெரு பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமார் ராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.