ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!
மயிலாடும் மலை ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் இன்று பங்குனி மாத செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் மேலக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மயிலாடும் மலை ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் இன்று (ஏப்ரல் 8) பங்குனி மாத செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.