கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

இரு மாவட்ட ஆட்சியாளர்களும் கலந்து பேசி உடனடியாக தீர்வு காண விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தல்.;

Update: 2025-04-09 01:05 GMT
கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
  • whatsapp icon
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சங்க கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் நேற்று சோமனூரில் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய தலைவர், கூட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து நியாயமான கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்திற்கு முடிவுகட்ட மாவட்ட ஆட்சியர்களை கூட்டமைப்பு வலியுறுத்தியது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (11-04-2025) முதல் செவ்வாய்க்கிழமை (15-04-2025) வரை சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டம் முடியும் வரை அச்சுப்பிணைக்கும் இயந்திர உரிமையாளர்கள் மற்றும் பாவு நூல் ஏற்றும் வாகன உரிமையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Similar News