தக்கோலம்:மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது;
தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க தக்கோலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சப்- இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் நேற்று மாலை தக்கோலம் புரிசை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தியதில் அவர் காஞ்சீபுரம் மாவட்டம் புரிசை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 50) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.